Dailyhunt
2026 தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. முன்னிலையில் யார்?

2026 தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. முன்னிலையில் யார்?

Cineulagam 2 days ago

2026 தேர்தல்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், இதுவரை பல்வேறு தொகுதிகளில் 2 முதல் 4 சுற்றுகள் வரை எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னனிலையில் யார்?

இதில் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 90 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 65 தொகுதியிலும், திராவிட முன்னேற்ற கழகம் 48 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதில் பெரம்பூர் தொகுதியில் 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் விஜய் முன்னணியில் இருக்கிறார்.

இது காலை 10 மணி நிலவரம் மட்டுமே, அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த நிலவரம் மாறுமா அல்லது தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்குமா என்பதை பார்ப்போம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam