பிளாஸ்ட்
ஆக்ஷன் ஹீரோ என்று சொன்னாலே நம் நினைவுக்கு வரும் சிலரில் முக்கியமானவர் ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன்.
திரையுலகில் 46 ஆண்டுகளாக பயணித்து வரும் இவரது நடிப்பில் கடந்த மே 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் பிளாஸ்ட்.
உலகளவில் கருப்பு திரைப்படம் செய்து வரும் வசூல் சாதனை.. இதுவரை இத்தனை கோடியா!!
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்திருந்தனர்.
வசூல்
பேமிலி ஆக்ஷன் ட்ராமா திரைப்படமாக வெளிவந்த பிளாஸ்ட், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் பிளாஸ்ட் திரைப்படம், 3 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது.

