மகுடம்
விஷால் நடித்து இயக்கிய முதல் படம் மகுடம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு டீசண்ட் எதிர்பார்ப்பு இருந்தது.
ஏனெனில் விஷால் முதன் முறையாக இயக்கி நடிப்பதால். அதனால் கண்டிப்பாக இந்த படம் நன்றாக வரும் என நினைத்தார்கள். ஆனால், படம் வெளியாகிய இரண்டே வாரத்தில் இப்படத்தை ரசிகர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டனர் என்பது கோலிவுட்டே அதிர்ச்சியாகியுள்ளது.

இதுவரை இந்த படம் ரூ 3+ கோடிகள் தான் மொத்த வசூலே வந்திருக்கும், அந்தளவிற்கு இந்த படத்தை ரசிகர்கள் ஒதுக்கிவிட்டார்கள் என தெரிகிறது. அதோடு விஷால் திரைப்பயணத்திலேயே மிக குறைந்த வசூல் கொடுத்த படம் இந்த மகுடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், விஷால் படம் என்றாலே மினிமம் கேரண்டி என்பது போக இத்தகைய வசூல் விஷால் மட்டுமின்றி விநியோகஸ்தர்கள் பலருக்கும் கடும் அதிர்ச்சி தான். கண்டிப்பாக விஷால் இதிலிருந்து மீண்டு வர வேண்டும், அவர் பல தோல்விகளை சந்தித்து வெற்றி பெற்றவர், இந்த தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

