Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்..

அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்..

Cineulagam 1 month ago

அய்யனார் துணை

ய்யனார் துணை சீரியலில் தற்போது சேரன், நிலா, சோழன் ஆகிய மூவரும் பீகார் கிளம்பி சென்றனர்.

அங்கு சந்தாவின் அம்மா, அப்பாவை பார்த்து திருமண விஷயம் குறித்து பேசினார்கள்.

என்ன நடந்தாலும் சந்தாவை சேரனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என அவர்கள் கூற, இறுதியாக ரூ. 25 லட்சம் பணமும், 30 சவரன் நகையும் 6 மாதத்திற்குள் சந்தாவுக்கு போடுகிறோம் என சோழன் சொன்னார். இதன்பின், சேரன் - சந்தா திருமணத்திற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால், சோழன் இப்படி சொன்னதில் நிலாவுக்கும், சேரனுக்கும் உடன்பாடே இல்லை. 6 மாதத்தில் எப்படி ரூ. 25 லட்சத்தையும், 30 சவரன் நகையையும் தயார் செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

மறுபக்கம், பாண்டியனுக்கும் வானதிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டியனை விட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்ய வானதி முடிவு எடுத்துள்ளார்.

அடுத்து நடக்கவிருப்பது

இந்த நிலையில், அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நிலாவின் அம்மா, அப்பா உட்பட அவருடைய மொத்த குடும்பமும் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே, நிலா - சோழன் திருமணத்திற்கு பின் நிலாவின் அப்பா அய்யனார் துணை குடும்பத்தின் வீட்டிற்கு வந்தபோது, சோழன் கடத்தப்பட்டு மிகப்பெரிய கலவரமே நடந்தது. இந்த முறை அம்மா, அப்பா இருவரும் நிலாவை பார்க்க வந்துள்ளனர். இப்போது என்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam