பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு ஷோ.
1st சீசன் ஆரம்பித்த நாள் முதல் கடைசியாக முடிந்த 9வது சீசன் வரை மக்களிடம் இருந்து பேராதரவு கிடைத்திருக்கிறது.
இந்த 9 சீசன்களில் நிறைய காதல் ஜோடிகள் இணைந்துள்ளனர், நிகழ்ச்சியில் தெரியாதவர்களாக இணைந்து ஷோவில் இருந்து வெளியே வரும்போது ஜோடியாக வெளியே வந்துள்ளார்கள்.
அமீர்-பாவனி
அப்படி பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்று காதல் ஜோடியாக வெளியே வந்தவர்கள் தான் அமீர்-பாவனி. காதலித்தவர்கள் திருமணமும் செய்துகொண்டு முன்னேறி வருகிறார்கள்.
அஜித்தின் துணிவு படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளனர். வீட்டின் பூஜை போடப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை அமீர் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

