Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கர்ணாவிடம் இந்து வாங்கிய சத்தியம்.. அதிரடி திருப்பங்களுடன் சின்னஞ்சிறு கிளியே!

கர்ணாவிடம் இந்து வாங்கிய சத்தியம்.. அதிரடி திருப்பங்களுடன் சின்னஞ்சிறு கிளியே!

Cineulagam 14 hrs ago

சின்னசிறு கிளியே

மிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு *7 மணிக்கு* ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் *சின்னஞ்சிறு கிளியே*.

கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், கிருபா பலமுறை அழைத்தும் கர்ணா இந்துவின் அருகில் இருந்து எழுந்து செல்லாமல் தூங்குவது போல நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

அதன்படி, இந்துவின் அருகில் இருக்க கிடைத்த இந்த வாய்ப்பை இழக்க விரும்பாத கர்ணா, தொடர்ந்து தூங்குவது போல நடிக்கிறான். பின்னர் மறுநாள் காலை எழுந்ததும் நேராக மெக்கானிக் கடைக்கு செல்கிறான். அங்கு பாண்டியனை சந்திக்கும் கர்ணா, முந்தைய இரவு நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிக்கிறான். அனைத்தையும் பொறுமையாக கேட்கும் பாண்டி, "வேறு எதுவும் நடக்கலையா?" என்று கேட்கிறான். அதற்கு கர்ணா, "வேறு எதுவும் நடக்கல, ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல படுத்து தூங்கினோம்" என்று சொல்ல, பாண்டி அவரை நக்கலாக திட்டுகிறான். மறுபக்கம், காலையில் எழும் இந்து, கர்ணாவின் அம்மாவின் புகைப்படம் முன் நின்று வேண்டிக்கொண்டு, பின்னர் கர்ணாவிடம் முக்கியமான ஒரு கோரிக்கையை வைக்கிறாள்.

"இனிமேல் உன் சம்பாத்தியத்தில் நம்ம வீட்டில் தனியாக அடுப்பு எரிய வேண்டும். நீ சம்பாதிக்கும் பணத்தில் நாம் சமைத்து சாப்பிட வேண்டும். உங்க அண்ணன் வீட்டில் இனி நான் சாப்பிட மாட்டேன். அதற்காக நீ ஒரு வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும்" என்று சத்தியம் வாங்குகிறாள்.

இந்துவின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளும் கர்ணா, அவளிடம் சத்தியம் செய்து கொடுக்கிறான். அதன்பிறகு நேராக பாண்டியனை சந்தித்து, தனக்கும் ஒரு வேலை ஏற்பாடு செய்து தருமாறு கேட்கிறான். இப்படியாக கதை பரபரப்பாக நகரும் நிலையில், அடுத்ததாக என்னென்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிய *சின்னஞ்சிறு கிளியே* தொடரை Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam