Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா?

கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா?

Cineulagam 1 week ago

சூர்யா

டிகர் சூர்யா, கருப்பு என்ற மாஸ் வெற்றிப்படத்தை சமீபத்தில் கொடுத்தவர்.

இப்படத்திற்கு பிறகு வெங்கட் அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாக தயாராகிவிட்டது.

இதன் தொடர்ச்சியாக இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா 47 படமும் தயாராகி வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் த.செ.ஞானவேலுடன் சூர்யா தனது 48வது படத்தில் நடிக்கிறார், இப்படத்தை ஹொம்பாலே மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சம்பளம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மே 15ம் தேதி வெளியான திரைப்படம் தான் கருப்பு.

ரூ. 130 முதல் ரூ. 140 கோடி வரையிலான பட்ஜெட்டில் வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 340 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தி பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இதனால் நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் வசூல் சாதனையால் சூர்யாவின் அடுத்த படத்திற்கான ஊதியம் ரூ. 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam