Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காயம் ஏற்பட்டு வீட்டிலேயே இருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா எங்கே சென்றுள்ளார் பாருங்க...

காயம் ஏற்பட்டு வீட்டிலேயே இருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா எங்கே சென்றுள்ளார் பாருங்க...

Cineulagam 11 hrs ago

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய சினிமாவில் ராஜ்ஜியம் செய்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம், புஷ்பா, புஷ்பா 2, வாரிசு போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் ஹிந்தி பக்கமும் சென்று அனிமல், சாவா, Cocktail 2 என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

பிஸியாக நடித்துவந்த ராஷ்மிகாவிற்கு மைசா படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு நடனக் காட்சி படப்பிடிப்பின் போது அவரது வலது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், அங்குள்ள தசைநார் பாதிக்கப்பட்டதாகவும் ராஷ்மிகா தெரிவித்திருந்தார்.

இதனால் படப்பிடிப்பு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

லேட்டஸ்ட்

காயம் காரணமாக வீட்டிலேயே முடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தனது கணவரும், நடிகருமான விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டியின் மகன் சஹில் ரெட்டியின் நிச்சயதார்த்த விழாவில் ராஷ்மிகா தனது கணவருடன் கலந்துகொண்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam