Dailyhunt
லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Cineulagam 1 week ago

லீடர்

யக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் லீடர்.

இப்படத்தை லெஜண்ட் சரவணனின் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தில் பாயல் ராஜ்புட், ஆண்ட்ரியா, ஷ்யாம், சந்தோஷ் பிரதாப், லால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க உடல் எடையை குறைத்த ரம்யா கிருஷ்ணன்.. இயக்குநர் கூறிய தகவல்

அதிகாரப்பூர்வ வசூல்

சமீபகாலமாக திரைப்படங்களின் வசூல் விவரங்களை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்களில் செய்த வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, மூன்று நாட்களில் லீடர் திரைப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 100 கோடி வசூலை நோக்கி லீடர் படம் சென்று கொண்டிருப்பதாகவும் அதில் பதிவிட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam