Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மறுமணம் செய்த சேதுவிற்கு அப்பத்தா கொடுத்த பரிசு, ஷாக்கில் குடும்பம்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ

மறுமணம் செய்த சேதுவிற்கு அப்பத்தா கொடுத்த பரிசு, ஷாக்கில் குடும்பம்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ

Cineulagam 2 weeks ago

சின்ன மருமகள்

டிச்சு சாதிக்க நினைத்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிற்கு நடந்த ஒரு திருமணம் வாழ்க்கையில் பெரிய போராட்டத்தை கொடுத்துள்ளது.

ஆசைப்பட்டு தமிழ்ச்செல்வியை சேது திருமணம் செய்தாலும் அவருக்கு உண்மையாக இருந்தது இல்லை. வீட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதற்கு தமிழ்ச்செல்வி தான் காரணம் என எல்லோரும் கூற சேதுவும் அவர்கள் சொல்வதையே நம்பினார்.

இதனால் பலமுறை தமிழ்ச்செல்வியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். தன் மீது எப்போதும் நம்பிக்கை இல்லாமல் இருப்பவருடன் வாழவே வேண்டாம் என சேதுவை மொத்தமாக தலைமூழ்கி விட்டார் தமிழ்ச்செல்வி.

புரொமோ

கடைசியாக சின்ன மருமகள் எபிசோடில், விபத்து ஏற்பட்டு ரோட்டில் வலியில் துடித்த தமிழ்ச்செல்வியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த சேது குழந்தை பிறப்பதையும் நேரிலேயே பார்த்தார்.

உனது குழந்தை என அப்பத்தா சேதுவிடம் கொடுக்க அவரோ குழந்தையை வாங்காமல் திருமண மண்டபம் வந்துவிட்டார்.

பல எதிர்ப்புகளை தாண்டி ஈஸ்வரி, சேதுவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் செய்துவைத்துவிட்டார். மண்டபத்திற்கு குழந்தையுடன் வந்த அப்பத்தா தமிழ்ச்செல்வி குழந்தையை சேதுவின் திருமணம் பரிசாக கொடுக்கிறார்.

அவரின் இந்த செயல் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதோ புரொமோ,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam