லீடர்
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இதன்பின், தன்னுடைய தோற்றத்தையே மாற்றி மாஸ் ஹீரோவாக லீடர் படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார். இப்படத்தை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்க லெஜண்ட் சரவணன் தயாரித்திருந்தார். பாயல் ராஜ்புட், ஷ்யாம், ஆண்ட்ரியா, லால் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஹீரோ லெஜண்ட் சரவணனை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

நடிகை ராஷ்மிகா கர்ப்பமா? திருமணம் ஆன ஒரே மாதத்தில் போட்ட பதிவு! உண்மை இதுதான்
இந்நிலையில், லீடர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங், இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

