Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ

Cineulagam 2 months ago

ராஷ்மிகா மந்தனா

ன்னடத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கி, பின் தெலுங்கு, தமிழ், இந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் சூப்பர்ஹிட் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.

இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் க்ரஷ் என செல்லமாக அழைப்பார்கள். இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2, சாவா ஆகிய படங்கள் மாபெரும் வசூல் சாதனை படைத்தன. மேலும், இந்திய அளவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் ஒருவராகவும் ராஷ்மிகா மந்தனா சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணம் உதய்பூரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

கழுத்து நிறைய நகை அணிந்து சீரியல் நடிகை ஷபானா எடுத்த போட்டோ ஷுட்

பிறந்தநாள்

முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள். தனது 30வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமணத்திற்கு பின் ராஷ்மிகா கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், அவருக்கு இன்று மிகவும் ஸ்பெஷல் நாளாகும்.

சொத்து மதிப்பு

நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam