Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தனது பெற்றோர்கள்... பதிவு போட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை...

நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தனது பெற்றோர்கள்... பதிவு போட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை...

Cineulagam 1 week ago

நேபாளம்

திபெத்தில் உள்ள பிரம்மாண்ட பனிப்பாறை ஒன்று திடீரென உருகி உடைந்து அங்குள்ள ஏரியில் பாய்ந்ததில் பெருமளவு நீர் நேபாளத்தில் பாயும் கோஷி ஆற்றில் கலந்து சீறிப்பாய்ந்தது.

இந்த இயற்கை அழிவால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாலங்கள், சாலைகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் கைலாச யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திபெத்-நேபாள எல்லைப் பகுதிகளில் சிக்கிக் கொண்டனர்.

நடிகை பதிவு

நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அரசு போராடி வருகிறது.

அதேபோல் தமிழக மக்கள் நிலை என்ன, அவர்களை எப்படி பாதுகாப்பாக இங்கே அழைத்து வருவது குறித்து முடிவு செய்ய தமிழக அமைச்சர்கள் சிலர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாவில், கைலாச மலைக்கு யாத்திரை சென்றுவிட்டுத் திரும்பிய அவரது பெற்றோர் உட்பட உறவினர்கள் பலர் நேபாள - திபெத் எல்லை இருந்தவர்களை காணவில்லை என்று அவர்களின் முழு விவரத்தையும் பதிவு செய்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam