Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சவுத்ரியின் ஆசை! விஜய் நினைத்திருந்தால்..

நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சவுத்ரியின் ஆசை! விஜய் நினைத்திருந்தால்..

Cineulagam 2 weeks ago

பிரபல தயாரிப்பாளர் R B சவுத்ரி நேற்று ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவர் பயணித்த கார் நேற்று மாலை சுமார் 3 மணிக்கு சாலை தடுப்பில் மோதி நொறுங்கி இருக்கிறது.

R B சவுத்ரி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் R B சவுத்ரியின் திடீர் மரணம் கடும் அதிர்ச்சியை தமிழ் சினிமா துறையினருக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நிறைவேறாமல் போன ஆசை

"சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமாக விஜய்யை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க விரும்பினார் R B சவுத்ரி. அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது."

"ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலேயே R B சவுத்ரி மறைந்துவிட்டார். விஜய் வெற்றி பெற்றதை அங்கிருந்து அவர் பார்த்திருப்பார், அந்த சந்தோஷத்திலேயே இப்படி நடந்திருக்கிறது" என பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி அளித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் நடிகர் விஜய் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அவருடன் எடுத்த பழைய போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் R B சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam