Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Patriot திரைவிமர்சனம்

Patriot திரைவிமர்சனம்

Cineulagam 3 weeks ago

யக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, பகத் பாசில், ரேவதி குஞ்சாகோ போபன் என கிட்டதட்ட ஒட்டுமொத்த மலையாள திரையுலகமே திரண்டு நடித்திருக்கும் திரைப்படம் Patriot .

பிரம்மாண்ட பொருட்செலவில் பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள Patriot திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

ரேவதி, ராஜிவ் மேனன் இந்தியாவில் மிகப்பெரிய புள்ளிகளாக இருக்க, இதில் ராஜிவ் மேனன் ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி அதை சாமனிய மக்கள் மொபைல், லேப் டேப்-ல் அப்லோட் செய்ய வைக்கிறார்.

இதன் மூலம் மக்கள் பயன்படுத்தும் மொபைலை இவர்கள் ஹாக்க் செய்து டேட்டாக்களை எடுக்க, இது எப்பாடியோ ரேவதிக்கு தெரிகிறது. இதனால் ராஜின் மேனன்-க்கு எதிராக ரேவதி ஆதாரங்களை மம்முட்டி மூலம் திரட்ட, ரேவதி சில நாளிலேயே இறந்து போகிறார்.

இதனால் மம்முட்டி எப்படியாவது இந்த உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என தன் பெயரை மறைத்து, லண்டன் சென்று ஒரு யுடியூபர் போல் இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் ராஜிவ் மேனன் மகன் பகத் பாசில் அசுர வேகத்தில் தன் கம்பெனியை வளர்த்து அந்த ஆப்-யை பொது மக்களிடம் கொண்டு செல்ல இந்த ஆபத்தை மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து எப்படி முறியடித்தார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மம்முட்டி இவருக்கு 70+ என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது, அந்த அளவிற்கு படம் முழுவதும் தூள் கிளப்புகிறார், அதிலும் இடைவேளை சண்டை காட்சிகள் எல்லாம் மம்முட்டி ரசிகர்களுக்கு விருந்து தான்.

படத்தின் முதல் பாதி முழுவதும் மெதுவாகவே நகர்கிறது, பெரிய சுவாரஸ்யமான காட்சிகள் என்றில்லாமல் கண்டெண்ட் மூலமாகவே படத்தை நகர்த்தி செல்கிறனர், இது ஒரு சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறது.

ஜெட்லீ: திரை விமர்சனம்

முதல் பாதியில் ரசிகர்கள் கொண்டாடும் காட்சி என்றால் இடைவேளை மற்றும் பகத் ஜெட்டில் மாட்டிக்கொள்ள அதை கீழே இருந்து கைய்ட் செய்து மம்முட்டி காப்பாற்றும் காட்சி.

அட மம்முட்டி மோகன் லால் சொன்னீங்க, அட எங்கப்பா மோகன் லால் என்று பார்த்தால் இடைவேளை முடிந்து தான் வருகிறார், லேட்டாக வந்தால் என்ன அவர் வந்தாலே அதிரடி தான் என்பது போல் மாஸ் Entry-யுடன் அவர் வரும் காட்சிகளில் ஆளுமை செலுத்தியுள்ளார்.

படத்தின் இரண்டாம் பாதி மோகன் லால் வருகைக்கு பிறகு படம் நன்றாகவே செல்கிறது, ஆனால் இரண்டு ஜாம்பாவன்கள் பல வருடம் கழித்து இணையும் போது தியேட்டர் மொமண்ட் இன்னும் அல்லவா இருந்திருக்க வேண்டும், அதிலும் கிளைமேக்ஸ் எந்த ஹை மொமண்ட் இல்லாமல் ப்ளாட் ஆக செல்கிறது.

பகத் எல்லாம் பல படங்களில் நாம் பார்த்து சலித்த கார்ப்ரைட் வில்லன் கதாபாத்திரம், அதே போல் நயன்தாரா எதோ படத்தின் ஹைப் ஆக ஒரு பெரிய நடிகை வேண்டும் என்பதற்காக வைத்துள்ளனர்.

டெக்னிக்கல் ஒர்க் டாப் நாச், ஒளிப்பதிவு ஹாலிவுட் லெவல், அதிலும் கார் பைட் வரும் காட்சி செம ட்ரீட், சுஷின் பின்னனி இசை பெரும் பலம்.

க்ளாப்ஸ்

மம்முட்டி, மோகன்லால்

படத்தின் இடைவேளை, இரண்டாம் பாதி

டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

ஹை மொமண்ட் என்றில்லாமல் ப்ளாட் ஆக கதைக்களம் சென்றது.

படத்தின் முதல் பாதி மிக மெதுவாக ஊர்ந்து செல்கிறது. மொத்தத்தில் இந்த Patriot இரண்டு யானைகள் வைத்து இன்னும் மிகப்பெரிய போர் நடத்தியிருக்கலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam