Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Paw Patrol: The Dino Movie திரை விமர்சனம்

Paw Patrol: The Dino Movie திரை விமர்சனம்

Cineulagam 2 days ago

Paw Patrol கனேடிய பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளியாகியுள்ள Paw Patrol: The Dino Movie அனிமேஷன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

படகில் ஏற்பட்ட தீயில் இருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிய பிறகு, Paw Patrol குழுவினர் ஒரு புயலில் சிக்குகின்றனர். அதனைத் தொடர்ந்து டைனோசர்கள் வசிக்கும் ஒரு தீவில் அவர்கள் கரை ஒதுங்குகின்றனர்.

சக்கர நாற்காலியை பயன்படுத்தும் ரெக்ஸ் என்ற நாய்க்குட்டி உட்பட சில நாய்க்குட்டிகள் டைனோசர்களுடன் தொடர்பு கொள்கின்றன. அதன் பின்னர் Paw Patrol குழுவினரும், சில ஆராய்ச்சியாளர்களும் அங்கே ஒரு செயல்பாட்டுத் தளத்தை அமைக்கின்றனர்.

அதே சமயம் மார்ஷல் என்ற நாய்க்குட்டி குட்டி டைனோசருடன் நட்புகொண்டு அதற்கு ரூபார்ப் என்று பெயரிடுகிறது. இந்த சூழலில், டைனோசர் தீவு குறித்து வெளியுலகத்திற்கு தெரிய வர, மேயர் ஹம்டிங்கர் அந்த தீவில் இருக்கும் வைரங்களை எடுக்க திட்டம் தீட்டுகிறார்.

அவர் தனது குழுவுடன் டைனோ தீவிற்கு செல்ல, அதன் பின்னர் என்ன ஆனது? Paw Patrol குழு அவர்களின் திட்டத்தை முறியடித்தனரா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

கால் ப்ரங்கர் என்ற கனேடிய அனிமேஷன் இயக்குநர் தனது அடுத்த படைப்பாக, Paw Patrol சீரிஸின் மூன்றாவது பாகத்தை கொடுத்துள்ளார். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் கதைக்களமும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளன.

கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் குழந்தைகளை குதூகலிக்க வைக்கின்றன. மலைகளின் இடுக்கில் சிக்கிக்கொண்ட டைனோசர் ஒன்றை Paw Patrol குழு காப்பற்றும் காட்சி மிகச்சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.


இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்

அதேபோல் குழந்தைகளுக்கு விடாமுயற்சி, பிறருக்கு உதவ வேண்டும் போன்ற நல்ல விஷயங்களை காட்சிகளாக காட்டிய விதம் அருமை. அனிமேஷன் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

பின்னணி இசை படத்திற்கு இன்னொரு பலம். கார்டனர், ரெயின் ஜன்ஜூவா, மெக்கென்னா கிரேஸ், டெர்ரி கிரேவ்ஸ் போன்றவர்கள் கச்சிதமாக பொருந்தும் வகையில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளனர்.

முந்தைய பாகங்களைப் போலவே இந்த Paw Patrol படத்தையும் குழந்தைகள் கொண்டாடும் வகையில் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.

க்ளாப்ஸ்

கதை

திரைக்கதை

காமெடி காட்சிகள்

கருத்து

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் இந்த Paw Patrol: The Dino Movie குழந்தைகளுடன் பெரியவர்களும் சேர்த்து கொண்டாடக்கூடிய பயணம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam