Dailyhunt
விருது மேல் விருது வாங்கிய பல்லவன், வீட்டில் நடேசன் செய்த காரியம்... அய்யனார் துணை சீரியல்

விருது மேல் விருது வாங்கிய பல்லவன், வீட்டில் நடேசன் செய்த காரியம்... அய்யனார் துணை சீரியல்

Cineulagam 1 week ago

அய்யனார் துணை

சிகர்கள் மிகவும் கொண்டாடும் அய்யனார் துணை சீரியலில் கடந்த சில வாரங்களாக ஒரே பிரச்சனையான கதைக்களமாக சென்று கொண்டிருந்தது.

முதலில் பாண்டி வானதியை பெண் பார்க்க செல்லாதது, அடுத்து பல்லவன் தனது தோழியை ஹோட்டல் அழைத்து சென்றது, கடைசியாக சோழன் நிலாவிற்காக பணம் திருடியது என பிரச்சனை, போலீஸ் நிலையம் சென்ற வண்ணம் இருந்தனர்.

இப்போது எல்லா பிரச்சனைகளும் முடிவடைந்துவிட்டது, அடுத்து சேரன் திருமண கொண்டாட்டம் ஆரம்பமாக உள்ளது.

எபிசோட்

இன்றைய எபிசோடில், பல்லவன் விருது வாங்குவதை பார்த்த சேரன் மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டார். பல்லவனை கட்டியணைத்து இவன் என் தம்பி என பெருமைக்கொள்கிறார்.

பல்லவன் வாங்கிய விருதுகளை பார்த்த நடேசன் அவை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறார், கண்ணாடி முன் நின்று அந்த விருதுகளை மாட்டிக்கொண்டு சிரிக்கிறார். அவரின் இந்த செயல்களை பார்த்த நிலா மற்றும் சேரன் அவரையும் அழைத்துச் சென்றிருக்கலாம் என வருத்தப்படுகிறார்கள்.

அந்த சந்தோஷத்தில் வீட்டிற்கு வந்தவர்கள் சேரன் திருமணம் பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர் திருமணம் செய்ய வேண்டுமா என நிலா சொன்னதை நினைத்து வருத்தத்திலேயே உள்ளார்.

எல்லோரும் பேசி அவரை சம்மதிக்க வைக்க திருமண ஏற்பாடுகளை தொடங்குகிறார்கள். அப்போது நிலா என்னென்ன செலவு என லிஸ்ட் போட நடேசன் என் சார்பாக சேரன் மனைவிக்கு செயின் போடுகிறேன், நீங்கள் தாலி மட்டும் வாங்குங்கள் என்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam