தமிழ் சினிமாவில் 23 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாராவுக்கு அடுத்து தமிழில் அதிக சம்பளம் வாங்கும் 2வது நடிகையாகவும் திரிஷா இருக்கிறார்.
ஆனால் அடிக்கடி நடிகை திரிஷா கடும் விமர்சனங்களில் சிக்கி வருகிறார். அவரைப் பற்றிய விவகாரமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி விடுகிறது. இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை திரிஷா நடிகர் சூர்யாவுடன் கருப்பு படத்தில் திரிஷா நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இப்போது 42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக கோலிவுட்டில் வலம் வருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷா குறித்து விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் விஜயும் திரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது என்று ஒரு விழாவில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் பேசியதும் பயங்கரமாக வைரலானது. இதற்கு நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பார்த்திபன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தனது வளர்ப்பு நாயை கோயிலுக்கு அழைத்துச் சென்று நாயுடன் செல்ஃபி எடுத்து திரிஷா பதிவிட்டு இருந்தார். அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் காதல் குறித்து நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த பதிவில் நடிகை திரிஷா கூறியிருப்பதாவது, காதல் மட்டுமே எல்லாம் அல்ல. ஆனால் காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது என்று திரிஷா அதில் கூறியிருக்கிறார். திரிஷா குறித்து பல்வேறு விமர்சனங்கள் விவாதங்கள் சர்ச்சைகள் உள்ள இந்த சூழலில் 42 வயதான திரிஷா காதல் குறித்து இப்படி பதிவிட்டு இருப்பது இன்னும் அவர் மீதான சர்ச்சையை அதிகரித்துள்ளது. கல்யாணம் வேணாம், காதல் மட்டும் வேணுமா என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

