Dailyhunt
74 வயதிலும் தளராத தோற்றம், ஷூட்டிங் ஸ்பாட்டில் சுறுசுறுப்பு குறையாத பழைய வேகம் - மலையாள நடிகர் மம்முட்டியின் இளமையின் ரகசியம்!

74 வயதிலும் தளராத தோற்றம், ஷூட்டிங் ஸ்பாட்டில் சுறுசுறுப்பு குறையாத பழைய வேகம் - மலையாள நடிகர் மம்முட்டியின் இளமையின் ரகசியம்!

Cricglitz Cinema 2 weeks ago

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்ற பழமொழி உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதற்கு உவமையாக எப்போதும் சொல்லப்படுகிறது.

அன்று முதல் இன்று வரை மட்டுமின்றி என்றென்றும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான பொன்மொழி தான் இது. எல்லா மனிதர்களுக்குமே ஆரோக்கியமே வாழ்க்கையில் பிரதானமாக உள்ளது.

எனினும் சினிமா கலைஞர்களுக்கு உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு நாளும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. கோடிக்கணக்கில் அவர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், அவர்கள் நோய்வாய்ப்பட்டு படுத்து விட்டால் பல கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

அத்துடன் அடிக்கடி நோய்வாய்படும் நடிகர்களின் உடல் தோற்றமும் முக அழகும் மாறிப் போய்விட்டால் திரையில் அவர்களை காட்ட முடியாது. அதனால் வயது எவ்வளவு அதிகரித்தாலும் தங்களை இளமையாக அழகாக காட்டிக் கொள்வதில் நடிகர்கள் நடிகைகள் அதிகளவில் மெனக்கெடுவார்கள். உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி என உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள்.

அதனால்தான் 70 வயதுகளை கடந்தும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிரஞ்சீவி போன்றவர்கள் இன்னும் ஹீரோக்களாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 74 வயதிலும் மலையாள நடிகர் மம்முட்டி இன்னும் படங்களில் ஹீரோவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக மலையாள மக்கள் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் விழிப்புணர்வும் கொண்டவர்கள். புட்டு வாழைப்பழம் கடலைக்கறி கஞ்சி பால் இல்லாத கட்டன்சாயா சமையலுக்கு தேங்காய் எண்ணெய் என ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

நடிகர் மம்முட்டி 74 வயதிலும் இப்படி சுறுசுறுப்புடன் இளமையாக இருக்க காரணம், அவர் எண்ணெய் குறைவாக பயன்படுத்தி சமைக்கப்பட்ட அசைவ வகைகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். தனக்கென தனியாக சமையல்காரர் வைத்திருக்கிறார். இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு 9 மணிக்கு தூங்க சென்றுவிடுகிறார். காலை உடற்பயிற்சி நடை பயிற்சி புத்தகங்கள் வாசிப்பு என உடல் மன ஆரோக்கியத்தை மிகவும் கவனித்து பராமரித்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema