இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய தனது படங்களில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வரிசையில் அவரது முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி.
இந்த படத்தில் பரிமளம் என்ற கேரக்டரில் ஊர் நாட்டாமையின் மகளாக ஊர்வசி துடுக்குத்தனமான ஒரு இளம் பெண்ணாக நடித்திருப்பார்.
அந்த கிராமத்துக்கு வாத்தியாராக வரும் பாக்யராஜை ஒரு தலையாக காதலிப்பார். ஒரு கட்டத்தில் வாத்தியார் தன்னை கெடுத்து விட்டதாக குழந்தையை தாண்டி பொய் சத்தியம் செய்து பாக்யராஜை திருமணம் செய்துக்கொள்வார். இந்த படம்தான் ஊர்வசிக்கு மிகப்பெரிய அடையாளத்தை அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் அவருக்கு பெற்றுத் தந்தது. அந்த வகையில் நடிகை ஊர்வசிக்கு ஒரு குருநாதராக இருந்து நடிப்பு சொல்லிக் கொடுத்து அவரைஜெயிக்க வைத்தவர் இயக்குனர் கே பாக்யராஜ் தான்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஊர்வசி பாக்யராஜின் இறுதி சடங்கில் ஏன் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதுகுறித்து நடிகை ஊர்வசி கூறியதாவது, பாக்யராஜ் சார் இல்லை என்ற தகவல் வந்தபோது ஷூட்டிங்கில் இருந்தேன். அதனால் இந்த விஷயம் எனக்கு உடனே தெரியவில்லை. தெரிந்ததும் ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது.
மறுநாள் காலையிலேயே போய் அவரை போய் பார்த்திடணும் என்று முடிவு பண்ணிட்டேன். அடுத்த நாள் காலையிலேயே கிளம்ப தயாராக இருந்தபோது அடக்கம் சீக்கிரம் நடந்துடும். முடிஞ்ச அளவுக்கு வேகமாக போங்க என்று ராதிகா மேடம் போனில் என்கிட்ட சொன்னாங்க. அதைக் கேட்டதும் அவசரமாக நான் புறப்பட்டேன். ஆனால் பாதி வழியில் போயிட்டு இருந்த போது அடக்கம் எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க.
அந்த நிமிஷம் என்னால அதை ஏத்துக்கவே முடியலே. காரை திருப்பிக்கிட்டு வீட்டுக்கே வந்துட்டேன். அவரை கடைசியாக பார்க்கக்கூட முடியவில்லை என்று நினைத்தாலே இன்னும் மனசு வலிக்குது.பாக்யராஜ் உயிருடன் இருந்தபோது எவ்வளவோ பேசி இருக்கிறோம். சிரித்து இருக்கிறோம். அந்த நினைவுகள் நிறைய இருக்கு. ஆனால் பாக்யராஜ் இல்லைன்னு தெரிஞ்ச உடனே கேமரா முன்னாடி நின்னு அவரைப் பற்றி பேசணும்ன்னு சொன்னால் என்னால பேச முடியாது. அந்த வேதனையில் வார்த்தையே வராது.
இப்போது கூட யாராவது இதெல்லாம் கனவு. பாக்யராஜ் சார் திரும்ப வந்துட்டாருன்னு சொல்லிட மாட்டாங்க என்கிற எண்ணம் என் மனசுல இன்னும் இருக்கு. அவர் இல்லைன்னு ஏத்துக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குது என்று ஊர்வசி அந்த நேர்காணலில் மிகவும் வருத்தமாக பேசியிருக்கிறார். இயக்குனர் கே பாக்யராஜின் பிரிவை இன்னும் ஏற்கவே முடியாமல் தவிக்கும் திரை உலகின் மனநிலை ரசிகர்களின் உணர்வையே ஊர்வசியின் வார்த்தைகள் பிரதிபலிப்பதாக உள்ளது.

