தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் டாப் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து செம்பருத்தி ஜீன்ஸ் ஆணழகன் பார்த்தேன் ரசித்தேன் அப்பு என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜன், இவர் நடிகர் சியான் விக்ரமின் சொந்த தாய்மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனது மனைவி கிரஹலட்சுமி விவாகரத்து செய்தார். இதனால் ஏற்பட்ட இமேஜ் பாதிப்பால் பிரசாந்த் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படத்தில் பிரசாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்து இந்தி படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்ட அந்தகன் படத்தில் பிரசாந்த் நடித்தார். அவரது அப்பா தியாகராஜன் இயக்கிய இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. கார்த்திக் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
தொடர்ந்து நடிகர் பிரசாந்த் இப்போது கோர்ட் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தையும் அவரது அப்பா தியாகராஜனே டைரக்ட் செய்து தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ரஞ்சன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தேவயானியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இதற்கிடையே அந்தகன் படம் வெளியான நேரத்தில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் ஒரு படத்தில் நடிக்க முடிவானது. இந்த படத்தின் அறிமுக விழாவும் நடந்தது. ஏற்கனவே நடிகர் பிரசாந்த் ஹரி இயக்கத்தில் தமிழ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். 2வது முறையாக அவர்கள் இருவரும் இணைய உள்ளதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்த படம் அப்படியே டிராப் ஆகி விட்டது. இந்த படத்துக்காக இயக்குனர் ஹரி வாங்கிய அட்வான்ஸ் தொகை, படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளுக்கான செலவு என எதையும் ஹரி தரப்பில் இருந்து திருப்பித் தரவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் ஹரி அட்வான்ஸ் மட்டுமே திருப்பி தருவதாக கூறிய நிலையில் இதுகுறித்து பிரசாந்த் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

