Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எல்லாத்தையும் பார்த்துட்டேன், அது ஒண்ணு மட்டும்தான் பாக்கி, என்னுடைய அடுத்த லட்சியம் அதுதான் - சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கருணாஸ்!

எல்லாத்தையும் பார்த்துட்டேன், அது ஒண்ணு மட்டும்தான் பாக்கி, என்னுடைய அடுத்த லட்சியம் அதுதான் - சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கருணாஸ்!

Cricglitz Cinema 1 week ago

டிகர் கருணாஸ் நடித்த என்ன விலை என்கிற படம் வருகிற செப்டம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் கருணாஸ் தனது சினிமா பயணத்தில் 25வது ஆண்டை நிறைவு செய்கிறார்.

இதுகுறித்து நடிகர் கருணாஸ் கூறியதாவது, தமிழ் சினிமாவில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் என்ன விலை படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று.

உண்மையாக சொல்வதென்றால் கடந்த 25 ஆண்டுகளாக இப்படி ஒரு படத்திற்காகவும் இப்படிப்பட்ட ஒரு படக் குழுவுக்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குனர் சஜீவ் பழூர் என்னிடம் கதையை சொன்ன போது உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுபூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பாக பணி செய்துள்ளனர்.

சினிமா விருதுகளும் திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்களும் ஊக்கமளித்தாலும் ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் போராட்டங்கள் சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை பேசும் இந்த படம் பார்வையாளர்களின் மனதை தொடும் என்று நம்புகிறேன்.

இப்போது முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். மாமன் மச்சான் ஹீரோவின் நண்பன் போன்ற கேரக்டர்களை தவிர்த்து வருகிறேன். சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்து விட்டேன். அடுத்த சில ஆண்டுகளுக்குள் தேசிய விருது பெற்றுவிட வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக கடுமையாக உழைப்பேன்.

பாடகர் நடிகர் தயாரிப்பாளர் என பல விஷயங்களை பார்த்து விட்டேன். கடைசியாக நான் பார்க்க வேண்டியது தேசிய விருதை மட்டும் தான் என்று நடிகர் கருணாஸ் கூறியிருக்கிறார். இப்போது கருணாஸ் மகன் கென் கருணாஸ்சும் தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன விலை என்ற படத்தை மலையாள இயக்குனர் சஜீவ் பழூர் டைரக்ட் செய்து இருக்கிறார். கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. நடிகர் கருணாஸ் உடன் நிமிஷா சஜயன் விஜயலட்சுமி பூர்ணிமா பாக்யராஜ் ஒய்ஜி மகேந்திரா மொட்டை ராஜேந்திரன் நிழல்கள் ரவி சித்தாதர்ஷன் மோகன்ராம் சேத்தன் குமார் கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema