Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
என் மனைவி என்னை விட்டு பிரிந்து போனதற்கு அதுதான் காரணம் - ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன்!

என் மனைவி என்னை விட்டு பிரிந்து போனதற்கு அதுதான் காரணம் - ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன்!

Cricglitz Cinema 6 days ago

லையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் திமிரு படத்தில் மூலம் அறிமுகமான விநாயகன் தொடர்ந்து எல்லாம் அவன் செயல் சிலம்பாட்டம் காளை மரியான் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் கவனத்தையும் பெற்றார்.

மலையாளத்தில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் விநாயகன் தொடர்ந்து சில ஆண்டுகளாக கடும் சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் சிக்கி வருகிறார். இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய பின்னடைவை தந்துள்ளது. மது போதையில் அடிக்கடி தகராறு செய்து வழக்குகளில் சிக்குவது நடிகர் விநாயகனின் வழக்கமாக உள்ளது.

ஐதராபாத் விமான நிலையத்தில் மது போதையில் பாதுகாப்பு படை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்ததால் கைது செய்யப்பட்டார். மது போதையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தகராறு மற்றும் சில சம்பவங்கள் அவரை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்றது. சமீபத்தில் சிறுமி ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்தும் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் தனது மனைவி குறித்து நடிகர் விநாயகன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, எனது திருமணம் காதல் திருமணமாகும். நானும் என் மனைவியும் 40 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால் இப்போது நாங்கள் பிரிந்து விட்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. சண்டை எதுவும் இல்லை. ஆனால் எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. நான் மனம் திறந்து பேச வேண்டிய ஒரே நபர் என் மனைவி தான். இப்போது அப்படி யாருமில்லை.

என் தவறால்தான் என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றாள். என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தனியாக நொறுங்கிப் போய் இருக்கிறேன். என்னால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அது என் பிரச்சனை. அவளுடையதல்ல. அவள் இன்னும் என் எல்லா பொருட்களையும் பார்த்துக் கொள்கிறாள். பிரிந்து செல்வதே நல்லது என்று எனக்குத் தோன்றியது. இல்லையென்றால் என் மனைவிக்கு பிரச்சனைகள் வந்துவிடும். நான் அவளது நிம்மதியை கெடுக்க போவதில்லை.

அவரின் வாழ்க்கையை அவர் வாழட்டும். இதுதான் அவருக்கும் எனக்கும் சிறந்தது. ஒன்றாக வாழ முடியாத நிலையில் பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவு செய்தோம் என்றாலும் என் மனைவியிடம் மட்டுமே என் மனக்குமுறல்களை கொட்ட முடியும். அவரிடம் இருந்து ஏற்பட்ட அந்நியப்படுதல் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் இருண்ட காலத்திற்கு என்னை தள்ளியது என்று நடிகர் விநாயகன் வேதனையாக அப்போது கூறியிருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema