Dailyhunt
எங்களுக்குள் இருப்பது பார்ட்னர்ஷிப் தான், அந்த அகங்காரம் வந்ததே இல்லை - ஐஸ்வர்யா ராய் குறித்து ஓபனாக பேசிய அவரது கணவர் அபிஷேக் பச்சன்!

எங்களுக்குள் இருப்பது பார்ட்னர்ஷிப் தான், அந்த அகங்காரம் வந்ததே இல்லை - ஐஸ்வர்யா ராய் குறித்து ஓபனாக பேசிய அவரது கணவர் அபிஷேக் பச்சன்!

Cricglitz Cinema 1 week ago

பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சன் முன்னாள் உலக அழகி மற்றும் இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகையாக ஐஸ்வர்யா ராயை கடந்த 2007ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நட்சத்திர தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா இடையே மன விரிசல் ஏற்பட்டுள்ளதாக அடிக்கடி தகவல் வைரலாகும் நிலையில் அதுகுறித்து நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் கூறியதாவது, என் பெற்றோரின் திருமணம் நடந்த போது என் தந்தையை விட என் தாய் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தார். எனவே இது ஒன்றும் இயல்புக்கு மாறான விஷயம் அல்ல. அது எப்போதும் ஒரு பார்ட்னர்ஷிப்பாக சிறப்பாக இருந்து வருகிறது.

எனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்து எனக்கு ஐஸ்வர்யாவை தெரியும். மேலும் நான் நடித்த இரண்டாவது படமே அவருடன் தான். நான் இணைந்து நடித்த பல படங்களில் இடம்பெற்ற ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய் மட்டுமே. சொல்லப்போனால் எனது இரண்டாவது படமான தாய் அக்சர் பிரேம்கே, 2000ம் ஆண்டில் வெளியான படமே அவருடன் இணைந்து நடித்ததுதான்.

அப்போது நாங்கள் இருவரும் காதலில் இருக்கவில்லை. நாங்கள் வெறும் நண்பர்களாக தான் இருந்தோம். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே திகழ்ந்தோம். நாங்கள் காதலித்த காலம் நிச்சயதார்த்தம் திருமணம் என அனைத்திலும் பார்ட்னர்ஷிப்பாகவே இருந்தோம்.

நான் சம்பாதித்து கொண்டு வருகிறேன். நீ வீட்டை பார்த்துக்கொள் என்பது போன்ற எந்த விவாதமும் எங்களுக்குள் இருந்ததில்லை. அது மிகவும் இயல்பாக அமைகிறது. என்னை பொறுத்தவரை இது எனக்கு கடுமையான அகங்காரத்தில் இருந்து வருகிறது என்றுதான் நினைக்கிறேன். ஒரு பந்தயத்தில் வெற்றி பெற வேறு யாரும் பின்வாங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

எனது தந்தை அமிதாப் பச்சன் என்னை அறிமுகப்படுத்தவோ அல்லது எனக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கவோ இல்லை. ஆனால் பின்னர் எனது படங்களில் ஒன்றான 2009ல் வெளியான பா திரைப்படத்தை அவர் தயாரித்தார் என்று நடிகர் அபிஷேக் பச்சன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இதன்மூலம் தனக்கும் தன் மனைவிக்கும் குடும்ப வாழ்க்கையில் எந்த மன விரிசலும் இல்லை என்பதையும் அபிஷேக் பச்சன் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema