Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
என்னை வழிநடத்த ஆள் இல்லே, நான் பண்ணாத கெட்ட பழக்கம் கிடையாது - பிரபல இயக்குனர் மகன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

என்னை வழிநடத்த ஆள் இல்லே, நான் பண்ணாத கெட்ட பழக்கம் கிடையாது - பிரபல இயக்குனர் மகன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

Cricglitz Cinema 1 week ago

மிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி வாசு. குறிப்பாக சின்னதம்பி மன்னன் சந்திரமுகி ரிக்‌ஷா மாமா பிரம்மா நடிகன் கிழக்குகரை பாண்டித்துரை இது நம்ம பூமி என பல படங்களை பி வாசு இயக்கி உள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ் சீனு உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இயக்குனர் பி வாசுவின் மகன் நடிகர் சக்தி. ரிக்‌ஷா மாமா நடிகன் சின்னதம்பி போன்ற சில படங்களில் இயக்குனர் பி வாசு தனது மகன் சக்தியை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்திருந்தார். மேலும் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் இயக்குனர் பி வாசு அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

நடிகர் சக்தி சில படங்களில் நடித்த போதும் அவரால் முன்னணி நடிகராக வெற்றி பெற முடியவில்லை. அவரது படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. மற்ற முன்னணி இயக்குனர்கள் யாரும் நடிகர் சக்தியை ஹீரோவாக நடிக்க முன்வரவில்லை. இதற்கிடையே விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சக்தி கலந்துக்கொண்டார்.

ஒருமுறை நடிகர் சக்தி குடிபோதையில் நடுரோட்டில் பிரச்னை செய்த ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் அவர் மதுப்பழக்கம் கொண்டவர் என்றும் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் சக்தி குறித்த மோசமான விமர்சனங்கள் அவரது சினிமா பயணத்தில் பெரிய பாதிப்பை தந்த நிலையில், அவர் இன்று வரை கவனம் பெறாத ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சக்தி கூறியதாவது, என்னை வழிநடத்த சரியான ஆள் கிடையாது தப்பான நண்பர்கள் சகவாசம். நான் பார்க்காத பண்ணாத கெட்ட பழக்கம் எதுவுமே கிடையாது அவ்வளவு தலைக்கணம் எனக்கு. அவ்வளவு திமிர் இருந்தது. இது எல்லாமே எனக்கு இருந்தது நான் இல்லைன்னு சொல்லவே மாட்டேன்.

எல்லோரும் கதவை மூடி வெச்சுக்கிட்டு செய்கிற தவறை நான் கதவை திறந்து வெச்சுக்கிட்டு பண்ணுவேன். அப்படி தான் நான் வாழ்ந்தேன். ஆனால் அது எல்லாமே உணர்ந்து ஒருத்தன் வரான் பாத்தீங்களா? அவன்தான் கடைசி வரை நிற்பான். அதற்கு உதாரணம் சிம்பு. சிம்பு தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அது ரொம்பவும் எனக்கு பிடிச்சுது. சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகர் சக்தி கூறியிருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema