தமிழ் சினிமாவில் தனது திறமையான இயக்கத்தால் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி.
இயக்குனர் மணிவண்ணனிடம் தொழில் கற்றவர். உள்ளத்தை அள்ளித்தா அவர் இயக்கிய முதல் படம். அதன்பிறகு ஏராளமான வெற்றிப் படங்களை அவர் கொடுத்து விட்டார்.
காதல் கவர்ச்சி காமெடி குடும்ப சென்டிமென்ட் ஆக்சன் இதுதான் இவரது படங்களின் தாரக மந்திரம். அதே நேரத்தில் அரண்மனை சீரிஸ் திகில் படங்களின் மூலமாகவும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சுந்தர் சி ஜெயித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அருணாசலம் படத்தையும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அன்பே சிவம் படத்தையும் இயக்கியவர் சுந்தர் சி. கமர்ஷியல் ரீதியாக அருணாசலம் வெற்றிப் படம். அதே நேரத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு படமாக அன்பே சிவம் படமும் இருந்தது.
இந்த நிலையில் நடிகர் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் அவரது 173வது படத்தை முதலில் இயக்க கமிட் செய்யப்பட்டவர் இயக்குனர் சுந்தர் சி தான். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென சுந்தர் சி அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். சுந்தர் சிக்கும் ரஜினிக்கும் இந்த படம் குறித்த கதை விவாதத்தில் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.
அந்த சம்பவத்தில் இருந்து சுந்தர் சிக்கும் ரஜினிக்கும் ஒரு மறைமுக கசப்பான உணர்வு இருந்து வருகிறது. அதனால் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகும் நாளில் புருஷன் படம் ரிலீஸ் ஆகும் என்று சுந்தர் சி தரப்பில் தகவல் வெளியானது. ஆனால் ஜெயிலர் 2 வரும் அக்டோபர் 15ல் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் மகுடம் படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியவில்லை. அதனால் அதற்குள் படத்தை முடிக்க முடியாது. அதனால் இப்போது ரஜினி நடித்து வரும் தர்மன் பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால் அப்போது புருஷன் படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் சுந்தர் சி முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

