தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களது அணிக்கு ஆதரவு கேட்டு மக்களை தேடி வருகின்றனர். தேர்தல் பொதுக்கூட்டங்களும் நடந்து வருகிறது.
இந்த முறை தேர்தல் களத்தில் உள்ள திரை நட்சத்திரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம். தவெக தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார். இதே கட்சியில் விஜயின் நெருங்கிய நண்பர் காமெடி நடிகர் ஸ்ரீநாத் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பல திரைப்படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரான அவர் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். காமெடி நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை தலைவரான அவர் திமுக கூட்டணி சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இயக்குனர் மற்றும் நடிகர் சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான அவர் காரைக்குடியில் போட்டியிடுகிறார். இதே கட்சி சார்பில் இயக்குனர் களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இயக்குனர் சுந்தர் சி அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.
நடிகர்கள் விஜய் கருணாஸ் மன்சூர் அலிகான் சுந்தர் சி களஞ்சியம் சீமான் ஸ்ரீநாத் உதயநிதி ஆகியோர் தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக உள்ளனர். இதில் நடிகர் சரத்குமார் ராதிகா சரத்குமார் குஷ்பூ விந்தியா நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நடிகர் போஸ் வெங்கட் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு அவர்கள் சார்ந்த கட்சியில் சீட் ஒதுக்கப்படவில்லை.
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் சேர நடிகர் மன்சூர் அலிகான் முயற்சித்தும் அவர்கள் தரப்பில் தொகுதி கிடைக்காத நிலையில் தனது கட்சி சார்பில் லால்குடியில் அவரே போட்டியிடுகிறார். குஷ்பூ ராதிகா சரத்குமார் போன்றவர்களுக்கு பாஜக வாய்ப்பு தரவில்லை. அதே போல் திவ்யா சத்யராஜ் போஸ் வெங்கட் போன்றவர்களுக்கு திமுக தரப்பிலும் சீட் கிடைக்கவில்லை.

