Dailyhunt
இதுவரைக்கும் 3 படங்களில் தான் நாயகனாக நடித்தார், நடிகர்  பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - அப்செட் ஆன ரசிகர்கள்!

இதுவரைக்கும் 3 படங்களில் தான் நாயகனாக நடித்தார், நடிகர் பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - அப்செட் ஆன ரசிகர்கள்!

Cricglitz Cinema 2 weeks ago

டிகர் ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படத்தில் கிளைமாக்ஸில் ஆட்டோ டிரைவராகவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.

தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த படம் லவ் டுடே. இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக அமைந்தது. 100 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக பிரதீப் மாறினார்.

அடுத்து ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அஸ்வத் மாரிமுத்து டிராகன் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்படி தொடர்ந்து 3 தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து நட்சத்திர நடிகராக பிரதீப் மாறினார்.

அதன்பிறகு அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்த டியூட் படமும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலில் வாரிக் குவித்தது. இதில் பிரதீப் ரங்கநாதனுடன் மமிதா பைஜூ சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில் இந்த படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. 2 ஆண்டுகளாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போன நிலையில் இப்போதுதான் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படமும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

இப்போது தெலுங்கில் பல வெற்றிப் படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர் சந்திரசேகர் எலேட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் சம்பளம் ரூ. 50 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. 4 படங்களில் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கும் பிரதீப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema