Dailyhunt
ஜனநாயகன் படத்துக்கு பதிலாக தேர்தல் களத்தில் குதிக்கும் விஜய் நடித்த அந்த மாஸ் ஹிட் படம் - அட இது வேற லெவல் சம்பவமாக இருக்குதே?

ஜனநாயகன் படத்துக்கு பதிலாக தேர்தல் களத்தில் குதிக்கும் விஜய் நடித்த அந்த மாஸ் ஹிட் படம் - அட இது வேற லெவல் சம்பவமாக இருக்குதே?

Cricglitz Cinema 1 week ago

டிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக தேர்தல் களத்தில் நிற்கிறார். எந்த கூட்டணி கட்சியின் ஆதரவும் இல்லாமல் தனித்த ஒரு கட்சியாக 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்.

மேலும் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பெரம்பூர் தொகுதியில் கடந்த 29ம் தேதி மனுதாக்கல் செய்த நிலையில் இன்று மதியம் திருச்சியில் உள்ள பாலக்கரை மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்திருக்கிறார். தொடர்ந்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் திரைக்கு வரவில்லை. இந்த படத்தில் சில அரசியல் காட்சிகள் இருப்பதால் அதற்காகவே இந்த படத்தை திரைக்கு வராமல் தடுத்து விட்டதாகவும் ஒரு புகார் இருந்து வருகிறது.

இந்த சூழலில் மிக விரைவில் நடிகர் விஜய் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற சர்கார் படம் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்தி சுரேஷ் ராதாரவி பழ கருப்பையா வரலட்சுமி சரத்குமார் துளசி யோகிபாபு லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படமாகும்.

இந்த படத்தின் கதைக்களம் என்பது வெளிநாட்டில் இருந்து ஓட்டு போடுவதற்கான வரும் விஜய் தனது ஓட்டை வேறு நபர் போட்டு விட தனது ஜனநாயக உரிமையை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து திரும்ப பெறுவார். பிறகு ஒரு கட்டத்தில் அவரே அரசியல் களத்தில் இறங்கி ஒருவிரல் புரட்சியாக தேர்தலில் வெற்றி பெறுவார்.

சர்கார் படத்தின் பல காட்சிகள் இன்றைய தவெக கட்சியின் அரசியல் சூழலை பிரதிபலிப்பதை போன்றே அப்போதே உருவாகி இருந்தது. அதனால் சர்கார் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டால் ஜனநாயகன் படத்தை காட்டிலும் இந்த படம் பெரிய அளவில் விஜய்க்கு மாஸாக அமையும் என்பதால் அந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema