Dailyhunt
காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த நடிகை சமந்தா!

காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த நடிகை சமந்தா!

Cricglitz Cinema 1 week ago

டிகை சமந்தா சமீபத்தில் தான் 2வது திருமணம் செய்து கொண்டார். சிட்டாடல் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நெடிமூர் என்பவரை மணந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அவர்களது திருமணம் கோவை ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் மிக எளிமையாக நடந்தது. திருமணத்துக்கு பிறகும் நடிகை சமந்தா சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனமும் அவர் நடத்தி வருகிறார். இந்த பரபரப்பான பிஸியான நேரத்திலும் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு வலைதள பக்கத்தில் ஏதேனும் முக்கிய தகவல்களை பரிமாறுவது நடிகை சமந்தாவின் வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக நடிகை சமந்தா சினிமா பணிகளில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவராக இருக்கிறார்.

அது மட்டும் இன்றி உணவு ஆரோக்கியம் உடற்பயிற்சி மன அமைதி குறித்து பல டிப்ஸ்களை தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். அந்த வகையில் தினமும் காலையில் எழுந்ததும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து நடிகை சமந்தா ஒரு பதிவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் நடிகை சமந்தா கூறியிருப்பதாவது, காலையில் எழுந்தவுடன் கார்டிசோல் அளவு இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் செல்போன்கள் மெயில் மற்றும் செய்திகளை பார்க்கும்போது மன அழுத்தம் மேலும் அதிகரிக்க கூடும். எனவே காலையில் எழுந்த முதல் ஒரு மணி நேரத்திற்கு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த 2 முதல் 5 நிமிடங்கள் வரை அமைதியான ஆழ்ந்த கவனமான சுவாச பயிற்சிகள் ஈடுபட வேண்டும்.

இதை 21 நாட்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். உங்கள் மன அமைதியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்த பயிற்சி உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி அழற்சியை குறைக்க உதவுகிறதா என பாருங்கள். மெதுவாக சுவாசிப்பது உங்கள் வேகஸ் நரம்பை தூண்டி நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மூளைக்கு உணர்த்துகிறது. மேலும் மன அழுத்தத்தில் உள்ள மூளையை விட பாதுகாப்பான மூளை கொழுப்பை எரித்து தன்னை சரி செய்து கொள்கிறது.

சீரான ரத்த அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு அதிகாலையில் சூரிய ஒளியில் நிற்பது, காலையில் ஒரு எளிய பானத்தை அருந்துவது, சமச்சீரான காலை உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். காலை 11 மணிக்குள் உங்கள் உடற்பயிற்சியை செய்து விடுங்கள். இன்று நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு நோக்கத்துடன் சிந்தியுங்கள். அதை எழுதியும் வைத்துக் கொள்ளுங்கள் என்று அந்தப் பதிவில் நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema