Dailyhunt
நடிகர் கார்த்தியா, சூர்யாவா, ஜெயம் ரவியா? சினிமாவில் எனக்கு போட்டி யார்? - கர பட விழா மேடையில் ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர் தனுஷ்!

நடிகர் கார்த்தியா, சூர்யாவா, ஜெயம் ரவியா? சினிமாவில் எனக்கு போட்டி யார்? - கர பட விழா மேடையில் ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர் தனுஷ்!

Cricglitz Cinema 2 weeks ago

டிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருகிறார். தயாரிப்பாளர் பாடகர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த லைன் அப்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இயக்குனராக அவர் இதுவரை 4 படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கர படத்தின் பிரமோசன் விழா நடந்தது. இந்த விழாவில் மேடையில் இருந்த இயக்குனர் மற்றும் நடிகர் கேஎஸ் ரவிக்குமார், படத்தின் நாயகன் நடிகர் தனுஷிடம் சில கேள்விகள் கேட்டார். கர படத்தில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் தனுஷூக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்.

அப்போது நடிகர் தனுஷிடம் கேள்வி கேட்ட இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், விஜய்க்கு அஜீத் போட்டி என்று சொல்வார்கள். அதுபோல் உங்களுக்கு சினிமாவில் போட்டியாளர் யார்? நானே ஆப்சன்ஸ் கொடுக்கிறேன். நடிகர் கார்த்தியா? நடிகர் சூர்யாவா? அல்லது நடிகர் ஜெயம் ரவியா? யார் உங்களுக்கு போட்டி என்று சொல்லுங்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்து நடிகர் தனுஷ் கூறியதாவது, சார் நாம எப்பவுமே ஒரு தனி ரூட்டில் போய்கிட்டு இருக்கிறோம். மத்த யார் ரூட்டுக்கும் நாம் போறதே இல்லை. என்னைக்குமே நான் நேற்று இருந்த வெர்ஷனை வந்து இன்னிக்கு எனக்கு போட்டியாக வெச்சுக்குவேன். அதை விட நான் இன்னிக்கு பெட்டரா இருக்கணும்.

நேத்து எப்படி நடிச்சேனோ அதைவிட இன்னிக்கு நான் பெட்டரா நடிக்கணும். நேத்து நான் கொடுத்த வசூலை விட இன்னிக்கு நான் பெரிய வசூலை கொடுக்கணும். நேத்து சாதிச்சதை விட இன்னிக்கு பெருசா சாதிக்கணும். அதனால் என்னை மட்டுமே எனக்கு நான் போட்டியா வெச்சுக்கறேன் என்று நடிகர் தனுஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

நடிகர் தனுஷூக்கு போட்டியாளராக நடிகர் சிம்பு என்று பொதுவாக கூறப்பட்டாலும் அது ஆரம்ப காலத்தில் அப்படி ஒரு பரபரப்பும் போட்டியும் ரசிகர்களிடையே தான் இருந்தது. இப்போது தனுஷ் சிம்பு இடையே அப்படிப்பட்ட போட்டி எதுவும் இல்லாத நிலையில், தனது படங்களே தனக்கு போட்டி, எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன் என்ற நடிகர் தனுஷின் வெளிப்படையாக பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema