இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் மண்டாடி. இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் வெற்றிமாறன் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
மண்டாடி பட விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது, இந்தியாவில் அமீர்கானின் தங்கல் படம் எல்லாம் 2000 கோடி வசூல் செய்ய முக்கிய காரணமே அந்த படம் சீனாவில் வெளியானது தான். சிவகார்த்திகேயன் நடித்த கனா படம் கூட சீனாவில் வெளியானது.
ஆனால் மண்டாடி படம் முழுக்க முழுக்க உலக அளவில் யாருமே பண்ணாத ஒரு படம். கண்டிப்பாக இந்த படத்தை சீன மொழியிலும் டப்பிங் செய்து அங்கேயும் வெளியிட்டால் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார். இது தற்போது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஹீரோ நடித்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை. குறிப்பாக தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களாக கூறப்படும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் போன்றவர்களின் படங்களே இன்னும் 1000 கோடி ரூபாய் வசூலை தொடவில்லை. 500 கோடி முதல் 600 கோடி ரூபாய் வசூலை எட்டுவதே பெரும் போராட்டமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் விடுதலை கருடன் கொட்டுக்காளி மாமன் என 4 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்த நடிகர் சூரி நடித்துள்ள மண்டாடி படம் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்று நடிகர் சத்யராஜ் மிகையாக பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஜினி கமல் விஜயை விட நடிகர் சூரி அவ்வளவு பெரிய நடிகரா?
நடிகர் சத்யராஜ் தனக்கு சூரி நடிக்கும் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு அளந்து விடுகிறாரே? கவுண்டமணி சொன்னது போல் பொய் சொல்லலாம். அதற்காக இப்படி ஏக்கர் கணக்கில் எல்லாம் அளந்து விடக்கூடாது என்று நடிகர் சத்யராஜை ரசிகர்கள் கலாய்த்து விமர்சித்து வருகின்றனர். இது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

