Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஸ்டாலின் சீமான் தோற்றது எனக்கு வருத்தம்தான், இனிமேல் அரசியல் பேச மாட்டேன், மௌனமாக இருப்பேன் - இயக்குனர் சமுத்திரக்கனி எடுத்த திடீர் முடிவு!

ஸ்டாலின் சீமான் தோற்றது எனக்கு வருத்தம்தான், இனிமேல் அரசியல் பேச மாட்டேன், மௌனமாக இருப்பேன் - இயக்குனர் சமுத்திரக்கனி எடுத்த திடீர் முடிவு!

Cricglitz Cinema 1 week ago

யக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சேத்தூர் கிராமத்தில் நடந்த கம்யூனிஸ்ட் விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசினார்.

அதில் அரசியல் சார்ந்த பல கருத்துகளை வெளிப்படையாக அவர் கூறியது இணையத்தில் வைரலானது.

அதில் இயக்குனர் சமுத்திரக்கனி பேசியதாவது, நடிகர் விஜயின் அரசியல் வருகை சுனாமியை போல் ஆகிவிட்டது. பணம் ஜாதி மதம் அகங்காரம் போன்றவை கடந்த தேர்தலில் உடைக்கப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த போது எல்லா கட்சிகளிலும் பணத்தைப் பெற்றுக் கொண்டு காசே தராத ஒருவருக்கு ஓட்டு போட்ட தமிழக மக்களே ஆகச்சிறந்த அறிவாளிகள் என்று காட்டிவிட்டார்கள்.

தேர்தல் என்ற சுனாமி அடித்துச் சென்ற போக்கில் சில நல்ல மனிதர்களையும் சேர்த்து தூக்கிச் சென்று விட்டது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணன் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் தோல்வி எனக்கு மிகுந்த கஷ்டத்தை அளித்தது. அதேபோல் அண்ணன் சீமானின் தோல்வியும் அவரது கட்சியிலிருந்து ஒரு சிலராவது சட்டசபைக்குள் சென்று இருக்கலாம்.

அண்ணன் திருமாவளவன் மற்றும் தம்பி அண்ணாமலை ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளே சென்று இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சமுத்திரக்கனி தனது கருத்துகளை பேசி இருந்தார்.

இது இணையத்தில் வைரலான நிலையில் ஒரு பக்கம் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிலர் கமெண்ட் செய்து வந்தனர். இதுகுறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது, எனது சொந்த ஊரான சேத்தூரில் இருந்த எஸ் பி செல்லப்பிள்ளை என்ற கம்யூனிஸ்ட்காரர் தான் எனக்குள் கம்யூனிஸ சிந்தனையை விதைத்தார்.

அவர் எனக்கு குருநாதர் மாதிரி. மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். அவரின் பட சிறப்பு விழாவில்தான் நான் பங்கேற்று பேசினேன். இதோடு நான் அரசியல் பேசுவதை நிறுத்தப் போகிறேன். கொஞ்ச நாளைக்கு மௌனமாக இருக்கப் போகிறேன். அன்று பேச வேண்டிய சூழல் இருந்ததால் பேசினேன். இனி மௌனமாக இருந்து நடக்கும் சம்பவங்களை பார்ப்போம் என்று இயக்குனர் சமுத்திரக்கனி கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema