மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்த நடிகர் சிம்பு அடுத்ததாக இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை கலைப்புலி தாணு பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில் இப்போது சென்னையில் 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அரசன் படம் வடசென்னை படத்தின் 2ம் பாகம் இல்லை என்றாலும் இந்த படத்தின் கதைக்களம் காட்சிகள் திரைக்கதை பின்னணி ஏறக்குறைய வடசென்னை படத்தின் சாயலில்தான் உருவாகி வருகிறது. ஏனென்றால் வடசென்னை படத்தில் நடித்த அனைவருமே அரசன் படத்திலும் நடிக்கின்றனர்.
வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ்தான். அவர்தான் வடசென்னை 2ம் பாகத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறனும் உறுதி செய்துவிட்டார். அரசன் படத்தை துவங்கும் முன்பே அதுகுறித்து தனுஷிடம் பேசிய வெற்றிமாறன், சிம்பு தான் ஹீரோவாக நடிக்கிறார் என்ற விஷயத்தையும் அவர் காதில் போட்டு விட்டார்.
அதனால் என்ன, தாராளமாக எடுங்கள் என்று தனுஷூம் வெற்றிமாறனிடம் கூறிவிட்டார். ஆனால் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அரசன் படத்தின் கதைக்கு தனுஷ் தடையின்மை சான்றிதழ் அதாவது என்ஓசி தர வேண்டும். அப்போதே கேட்டதற்கு தனுஷ் நான் தந்து விடுகிறேன் என்றும் சொல்லி விட்டார்.
ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் அரசன் படத்திற்கு தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் இருந்து என்ஓசி வழங்கப்படவில்லை. படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் தாணு இதுபற்றி அதிகம் யோசிக்காமல் இருந்து வருகின்றனர். ஆனால் படத்தின் நாயகன் சிம்பு அடிக்கடி வெற்றிமாறனிடம் இதுகுறித்து ஞாபகப்படுத்தி வருகிறார்.
விரைவில் தனுஷிடம் என்ஓசி வாங்கி விடுங்கள். கடைசி நேரத்தில் அதனால் ஏதேனும் சிக்கல் ஆகிவிட போகிறது என்றும் வெற்றிமாறனிடம் எச்சரித்துள்ளார். ஆனால் தனுஷின் மிக நெருக்கமான நட்பில் இருப்பவர் வெற்றிமாறன். அதனால் வெற்றிமாறன் என்ஓசி பெறுவதில் பெரிய ஆர்வமின்றி தனுஷ் மீது அதீத நம்பிக்கையில் உள்ளார். எனினும் சிம்பு அவ்வப்போது வெற்றிமாறனிடம் தனுஷிடம் இருந்து என்ஓசி விரைவில் வாங்குமாறு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

