Dailyhunt
சிவகார்த்திகேயனை நம்பி வர நான் தயாராக இல்லை, அவரை வைத்து படம் இயக்க மாட்டேன் - நெத்தியடி பதில் தந்த சிம்பு பட இயக்குனர்!

சிவகார்த்திகேயனை நம்பி வர நான் தயாராக இல்லை, அவரை வைத்து படம் இயக்க மாட்டேன் - நெத்தியடி பதில் தந்த சிம்பு பட இயக்குனர்!

Cricglitz Cinema 1 week ago

டிகர்கள் அசோக் செல்வன் விஜய் சேதுபதி ரமேஷ் திலக் ரித்திகா சிங் வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து.

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தை அவர் டைரக்ட் செய்தார்.

இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலையும் குவித்தது. இந்த படத்தில் ஒரு கேரக்டரில் அஸ்வத் மாரிமுத்துவும் நடித்திருந்தார். மேலும் இதில் மிஷ்கின் கேஎஸ் ரவிக்குமார் கௌதம் மேனன் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய இருக்கிறார். தற்போது அரசன் படத்திலும் சிம்புவுடன் முக்கிய கேரக்டரில் அஸ்வத் மாரிமுத்து நடிக்கவும் கமிட் ஆகி உள்ளார். அரசன் படப்பிடிப்பு முடிந்த பிறகு சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். மே மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து அஸ்வத் மாரிமுத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குமாறு அவரிடம் பேசப்பட்டுள்ளது. அப்போது சிம்பு படம் இருப்பதால் இப்போதைக்கு அது முடியாது என்று நாசூக்காக மறுக்காமல் அஸ்வத் மாரிமுத்து ஓபனாக அவரது கருத்துகளை கூறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனை நம்பி என்னால் வர முடியாது. அவரை வைத்து நான் படம் டைரக்ட் செய்ய மாட்டேன். ஏற்கனவே இயக்குனர் வெங்கட்பிரபுவை 2 ஆண்டுகளாக காத்திருக்க வைத்து விட்டு கடைசியில் அவரை கழட்டி விட்டு விட்டார். மேலும் அவர் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிபி சக்ரவர்த்தி குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இப்படி பலரை சொல்லலாம்.

அப்புறம் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ஓடவில்லை. இப்படி இருக்கும் போது இவரை நம்பி நான் படம் இயக்க தயாராக இல்லை என்று அஸ்வத் மாரிமுத்து வெளிப்படையாக அவர்களிடம் கூறியிருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் கவனத்துக்கு சென்றாலும் அது முழுக்க முழுக்க உண்மைதான் என்பதால் அவர் எந்த ரியாக்சனும் காட்ட வழியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema