Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனது கணவர் அஜீத்குமார் நடிக்கும் சொந்த தயாரிப்பு படத்தில் நடிகை ஷாலினி மீண்டும் நடிக்கிறாரா? - அவரே தந்த விளக்கம்!

தனது கணவர் அஜீத்குமார் நடிக்கும் சொந்த தயாரிப்பு படத்தில் நடிகை ஷாலினி மீண்டும் நடிக்கிறாரா? - அவரே தந்த விளக்கம்!

Cricglitz Cinema 1 week ago

மிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் பேபி ஷாலினி. சங்கர் குரு ராஜா சின்ன ரோஜா நிலவே மலரே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிறகு கதாநாயகியாக காதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு பிரியாத வரம் வேண்டும் அலைபாயுதே அமர்க்களம் என பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

இதில் அமர்க்களம் படத்தில் நடிகர் அஜீத்குமாருடன் நடித்த போது ஷாலினிக்கும் அஜீத்குமாருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

தனது திருமணத்துக்கு பிறகு நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்கவில்லை. குடும்பத்தை கவனித்துக்கொண்டு பிள்ளைகளின் படிப்பு மற்றும் அவர்களது விருப்பங்களில் அதிக கவனம் செலுத்தினார். இந்நிலையில் இப்போது நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படம் டேர்டெவில் படத்தை நடிகை ஷாலினி சொந்தமாக தயாரிக்கிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா முக்கிய கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதன் முறையாக இந்த படத்தை நடிகர் அஜீத்குமாரே தனது மனைவி ஷாலினி பெயரில் முதன் முறையாக தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிகை ஷாலினி முக்கியமான கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்துக்கு பிறகு பல ஆண்டுகளாக ஷாலினி நடிக்காத நிலையில் மீண்டும் தனது கணவர் அஜீத்குமார் நடிக்கும் படத்திலேயே அவர் நடிக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதுகுறித்து நடிகை ஷாலினி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. தனக்கு இனிமேல் சினிமாவில் நடிக்கும் எண்ணமே சிறிதும் இல்லை என்றும் கேமராவுக்கு முன்பு தோன்றுவதை விட கேமராவுக்கு பின்னால் இருந்து அதாவது திரைக்கு பின்னால் இருந்து மட்டுமே பங்களிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema