Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உண்மையில் இது மிக நல்ல படம், என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் இந்த படத்துக்கு ஆதரவு கொடுங்க - நடிகர் சிம்பு வேண்டுகோள்!

உண்மையில் இது மிக நல்ல படம், என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் இந்த படத்துக்கு ஆதரவு கொடுங்க - நடிகர் சிம்பு வேண்டுகோள்!

Cricglitz Cinema 1 week ago

பெரிய தொழில் நிறுவனங்கள் கார்பரேட் நிறுவனங்கள் வியாபார தலங்களுக்கு நட்சத்திர நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் விளம்பரம் செய்து பிரமோசன் தருகின்றனர்.

இது ஜவுளிக்கடைகள் ஓட்டல்கள் நகைக்கடைகள் வரை தொடர்கிறது. ஆனால் வர்த்தக ரீதியாக இது ஒரு விளம்பர யுக்திதானே தவிர வாடிக்கையாளர் திருப்தி என்பது இரண்டாம் பட்சம்தான்.

அந்த வகையில்தான் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது பிரமோசன் என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்கின்றனர். அந்த அத்தகைய படங்கள் டப்பா படங்கள் என்றும் காட்டு மொக்கை படங்களாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான டாக்சிக் படத்தை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அதே நேரத்தில் விளம்பரமே இன்றி சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சத்துடன் திரைக்கு வருகின்றன. ஆனால் ரசிகர்கள் அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் அந்த படங்கள் ஜொலிக்காமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது. அதுபோல் மொத ராத்திரி என்ற சமீபத்தில் வெளியான படத்துக்கு நடிகர் சிம்பு தனது ஆதரவை தந்து பாராட்டியிருக்கிறார்.

நடிகர் சிம்பு மொத ராத்திரி படம் குறித்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மற்ற மொழிகளிலிருந்து வரும் சிறிய அழகான படங்களை அடையாளம் கண்டு அவற்றை மிகவும் கொண்டாடுகிறோம். ஒரு தமிழ் படம் ஒரு புதிய குழுவுடன் புதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது அதற்கு அதே அன்பையும் ஆதரவையும் நாம் கொடுக்க வேண்டும்.

ஒரு கிராமத்து திருமணத்தை மையமாகக் கொண்டு ஒரே இரவில் நடக்கும் கதை. அதிலிருந்து பல கதாபாத்திரங்களும் மிகவும் நிஜமாக தோன்றிய சிறு சிறு தருணங்களும், திரைக்கதை நகைச்சுவை ஒருவருக்கொருவர் பழகும் விதம் மற்றும் கதாபாத்திரங்கள் என அனைத்தும் மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருந்தன.

ஒரு புதிய இயக்குனரும் குழுவும் இவ்வளவு அழகான மற்றும் சுவாரசியமான ஒன்றை உருவாக்கி இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி. இயக்குனர் ராஜா கருப்பசாமி முழு நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றும் இந்த படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். எனது ரசிகர்கள் மற்றும் சினிமா விரும்பும் அனைவருக்கும் மொத ராத்திரி படத்தை திரையரங்குகளில் பார்த்து படக்குழுவினரை ஆதரியுங்கள் என்று நடிகர் சிம்பு தனது பதிவில் கூறியிருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema