தமிழ் சினிமாவில் தனது வசீகரமான அழகால் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மீனா. கடந்த 1980 90களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் அஜீத்குமார் என பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.
இப்போதும் அவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரைப்பட நடிகையாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட நடிகை மீனாவிடம் மிகச்சிறந்த வணிகத் திறமை இருக்கிறது என்பதை ஒரு சமீபத்திய நிகழ்ச்சி நிரூபித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி கட்டப்பட்ட தனது வீட்டை 100 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 கோடி ரூபாய் கடன் வாங்குவது ஒரு பெரிய ரிஸ்க்கான விஷயம்.
கடந்த 1996ம் ஆண்டில் இன்றைய மதிப்பில் 100 கோடி ரூபாயை விட 10 கோடி ரூபாய் என்பது அதிக மதிப்பானதாக இருந்தது. அப்போது தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திரமாக இருந்த நடிகை மீனா ஒரு ரிஸ்க்கான முடிவை எடுத்தார். அவர் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து 10 கோடி ரூபாய் கடன் வாங்கி தமிழ்நாட்டில் ஒரு ஆடம்பரமான பிரமாண்டமான பங்களா வீட்டை கட்டினார்.
பொதுவாக நடிகர்கள் சொகுசு கார்கள் மற்றும் நகைகளுக்காக தான் அதிக பணத்தை செலவிடுவார்கள். ஆனால் மீனா ரியல் எஸ்டேட்டில் அதாவது தனது சொந்த வீட்டில் முதலீடு செய்தார். அவர் அப்போது சந்தித்த கஷ்டங்களும் கடன் சுமையும் இன்று அவருக்கு பெரிய லாபத்தை கொண்டு வந்து தந்துள்ளது. தற்போது பல நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் கிடைத்தாலும் பழைய வடிவமைப்பு கட்டிட கலை வீடுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
நடிகை மீனா கட்டிய இந்த வீடு வெறும் சிமெண்ட் மற்றும் செங்கற்களால் ஆன கட்டிடம் மட்டுமல்ல; இது கடந்த காலத்தின் பாரம்பரிய கட்டடக் கலையின் ஒரு அற்புதமான கலவையாகும். இந்த வீடு பண்டைய கால அரண்மனைகளின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் செதுக்கப்பட்ட மரத் தூண்கள் ஒரு விசாலமான முற்றம் மற்றும் அக்காலத்தின் அரச கம்பீரத்தை நினைவூட்டும் வசதிகள் உள்ளன.
இன்றைய காங்கிரீட் காட்டின் மத்தியில் இது போன்ற பாரம்பரியமான பாணியில் வீடுகளை காண்பது என்பது மிகவும் அரிது. அதனால்தான் இந்த வீட்டுக்கு அதிகமான கவனமும் தேவையும் உள்ளது. இந்த வீட்டின் அழகால் ஈர்க்கப்பட்ட ஒரு அமெரிக்க தம்பதி, அதை அதிக விலைக்கு வாங்க முன்வந்தனர். பழைய கால கட்டட கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வம் கொண்ட அந்த தம்பதி மீனாவின் வீட்டை 100 கோடி ரூபாய்க்கு விலை பேசி வாங்கியுள்ளனர். அதனால் மீனாவை பணத்தின் அருமை தெரிந்த ஒரு பொருளாதார வல்லுனர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

