நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு என்றாலே அங்கே பரபரப்புக்கும் குறைவிருக்காது. அதுவும் அவுட்டோர் ஷூட்டிங் என்றால் ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என்று ஏராளமான மக்கள் கூடிவிடுவார்கள்.
அவர்களை கட்டுப்படுத்துவதே படக்குழுவினருக்கு பெரிய வேலையாக போய்விடுகிறது.
அதனால் பெரும்பாலும் ரஜினி படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்குககள் கர்நாடகா ஆந்திரா ஐதராபாத் வைசாக் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் நடத்தப்படுகிறது. ஏனெனில் அங்கு ஓரளவு கூட்டத்தை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் தமிழ்நாட்டில் என்றால் ரசிகர்கள் கூட்டத்தை கண்ட்ரோல் செய்வது சிக்கல்தான்
அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் குறித்த நேரத்துக்குள் அன்று திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் மும்முரமாக இருப்பார்கள். ஏனெனில் ரஜினி போன்ற பெரிய நட்சத்திர நடிகர்களின் கால்ஷீட்டை அதிகரிக்குமாறு படப்பிடிப்பு நேரத்தில் கேட்கவும் முடியாது.
அதே நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது ரஜினிகாந்த் தன்னை சுற்றிலும் என்ன நடக்கிறது? மற்ற துணை நடிகர்கள் நடிகைகள் காட்சிகள் எடுக்கப்படும் விதம் உதவி இயக்குனர்கள் செயல்பாடு போன்றவற்றை கவனித்துக்கொண்டே இருப்பார். ஏனெனில் சினிமாவில் கமல் ரஜினி போன்றவர்கள் ஜீனியஸ் என்பதால் அதில் கவனமாக இருப்பார்கள்.
இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் குசேலன். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் தான் இசையமைப்பாளராக இருந்தார். குசேலன் படப்பிடிப்புக்கு வந்திருந்த ஜீவி பிரகாஷ் ஆங்காங்கே நின்றுக்கொண்டு ரஜினியை பார்த்தபடி இருந்துள்ளார். அதனைப் பார்த்து குழப்பமடைந்த ரஜினி, இயக்குனரிடம் சென்று யார் அந்த பையன்? படப்பிடிப்புக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறான்.
எப்பவும் என்னையே பார்த்துட்டு இருக்கிறான் என்று கேட்டுள்ளார். இவர் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். ஏஆர் ரகுமானின் அக்கா பையன். அவரது சொந்த மருமகன் ஜிவி பிரகாஷ் என்று பி வாசு கூறியுள்ளார். உடனே ஜீவி பிரகாஷ் குமாரை அருகில் அழைத்த ரஜினிகாந்த், என்னங்க சொல்ல வேண்டியது தானே இசையமைப்பாளர்ன்னு வியந்து பேசிய ரஜினி அன்று முழுவதும் ஜீவி பிரகாஷூடன் நாளை செலவிட்டுள்ளார்.

