மூன்று முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் முதல் விளையாடிய கொல்கத்தா அணி 200-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தாலும் மும்பை அணி அந்த இலக்கினை சேசிங் செய்து வெற்றி பெற்றது.
அஜின்க்யா ரஹானே நிகழ்த்தப்போகும் சாதனை :
அந்த போட்டியில் கொல்கத்தா அணியின் நட்சத்திர பவுலர்கள் விளையாடாதது தோல்விக்கு காரணமாகவும் பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ஏப்ரல் 2-ஆம் தேதியான இன்று தங்களது சொந்த மைதானத்தில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கே.கே.ஆர் அணி பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. இதன் காரணமாக தற்போது கொல்கத்தா அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொடரின் முதல் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அஜின்க்யா ரஹானே 40 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோன்று இன்றைய ஆட்டத்திலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாட இருப்பதன் மூலம் 11-ஆவது வீரராக ஐபிஎல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த அஜின்க்யா ரஹானே காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 200 ஆட்டங்களை பூர்த்தி செய்த வீரர்களாக மஹேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஷிகார் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் இருக்கின்றனர்.
கேப்டனாக இருப்பதால் இஷான் கிஷனுக்கு இந்த 2 கூடுதல் சாதகமும் இருக்கு - டேனியல் வெட்டோரி பேட்டி
இந்நிலையில் இன்றைய சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருப்பதன் மூலம் அஜின்க்யா ரஹானே ஐ.பி.எல் போட்டிகளில் தனது 200-வது ஆட்டத்தை விளையாட இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 200 ஆட்டங்களை பூர்த்தி செய்த 11-வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
