ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை பெற்று மோசமான நிலையை சந்தித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணியானது பத்தாவது இடத்தை பிடித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் இம்முறையும் சிஎஸ்கே அணியின் ஆட்டம் திருப்திகரமாக அமையவில்லை.
14 கோடி கொடுத்து அவரை ஏன் எடுத்தீங்க? : ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளிலேயே தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் வேளையில் இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது? என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. தோனி, பிரேவிஸ், நாதன் எல்லிஸ் போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஆரம்ப கட்டப் போட்டிகளில் விளையாடாதது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் 14 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பிரசாந்த் வீருக்கு ஏன் பவுலிங் கொடுப்பதில்லை? என்ற ஒரு விமர்சனத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பிரசாந்த் வீரை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஆல்ரவுண்டராக அணியில எடுத்து அவருக்கு ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் கூட பந்து வீச அனுமதிக்காதது ஏன்? மூன்று போட்டிகள் கடந்துவிட்டன.
அவருக்கு இன்னமும் பந்து வீச வாய்ப்பு கொடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு ஆல்ரவுண்டராக அணியில் தேர்வு செய்யபட்ட அவரை பந்துவீச விடுவதில்லை. இப்படி என்றால் உங்களது முடிவு என்ன? என ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணியை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார் மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :
யுவ்ராஜ் சிங் மற்றும் ஏ.பி.டி-க்கு அடுத்து 3 ஆவது வீரராக டிம் டேவிட் நிகழ்த்திய - அசத்தல் சாதனை
சிஎஸ்கே அணித்தேர்வு மட்டுமே தற்போது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ருதுராஜ் மற்றும் சாம்சன் ஆகியோர் முதல் மூன்று போட்டிகளிலுமே ஏமாற்றி விட்டனர். அவர்கள் இருவரும் பார்மிற்கு வந்தால் மட்டுமே சிஎஸ்கே அணியால் கௌரவமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் இல்லையென்றால் இந்த தோல்வி தொடரும் என்றும் ஆகாஸ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.
