அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியானது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ராசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இரண்டாவது இந்திய பவுலராக புவனேஷ்வர் குமார் நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆர்.சி.பி அணி சார்பாக அதிகபட்சமாக படிக்கல் 40 ரன்களையும், விராட் கோலி 28 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக பந்து வீசிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த போட்டியில் அவர் முதல் விக்கெட்டை எடுத்த போது இரண்டாவது இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் புவனேஷ் குமார் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இந்த போட்டியின் போது அவர் எடுத்த முதல் விக்கெட்டின் மூலம் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 350 விக்கட்டுகளை பூர்த்தி செய்தார். இதன் மூலம் யுஸ்வேந்திர சஹாலுக்கு அடுத்து 350 விக்கெட்டை டி20 போட்டிகளில் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்து பும்ரா 347 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
