Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

240 ரன்கள் சேசிங் செய்யக்கூடிய இலக்கு தான்.. ஆனா நாங்க தோக்க இதுவே காரணம் - பேட் கம்மின்ஸ் பேட்டி

Crictamil 2 weeks ago

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நியூ சண்டிகார் நகரில் நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : பேட் கம்மின்ஸ் பேச்சு

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை குவிக்க பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 196 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியாதாவது : வைபவ் சூர்யவன்ஷி விளையாடிய விதம் உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருந்தது. அவருக்கு எதிராக நிறைய ஆப்ஷன்கள் எங்களிடம் இல்லை. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் மைதானத்தின் எல்லைகளும் சிறிது என்பதனால் நிறைய ரன்கள் கசிந்தன.

பவுலர்கள் சிறிது தவறு செய்தாலும் ரன்கள் சென்று விடுகிறது. இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததில் சற்று வருத்தம் இருக்கிறது. ஆனாலும் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த ஆடுகளத்தில் 240 ரன்கள் என்பது சேசிங் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனாலும் இதுபோன்ற ஒரு பெரிய இலக்கினை சேசிங் செய்யும் போது விக்கெட்டுகள் கையில் இருப்பது அவசியம்.

சன் ரைசர்ஸ் அணியை நாங்க வீழ்த்தியிருந்தாலும் இது பத்தாது - ரியான் பராக் பேச்சு

நாங்கள் இந்த போட்டியின் போது தவறான நேரத்தில் விக்கெட்டுகளை நிறைய இழந்துவிட்டோம். அதன் காரணமாகவே சேசிங்கை பூர்த்தி செய்ய முடியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே எங்களது அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு இன்னும் பலமாக திரும்புவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil