Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

5 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் அசத்தல் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் அக்சர் படேல் - விவரம் இதோ

Crictamil 1 week ago

ங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

5 ஆவது இந்திய வீரராக அக்சர் படேல் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது இன்று ஜூலை 9-ஆம் தேதி பிரிஸ்டல் நகரில் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்க காத்திருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் அக்சர் பட்டேல் சர்வதேச டி20 போட்டிகளில் 5-வது இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் அக்சர் படேல் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 99 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இன்றைய நான்காவது போட்டியில் விளையாட இருக்கும் அவர் தனது 100-ஆவது டி20 போட்டியில் விளையாட இருக்கிறார்.

இன்றைய நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் - லிஸ்ட் இதோ

இதன் மூலம் இந்திய அணிக்காக 100 டி20 போட்டியில் விளையாடிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்த காத்திருக்கிறார். இவருக்கு முன்னதாக ரோகித் சர்மா, ஹார்டிக் பாண்டியா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் இன்று அக்சர் படேல் தனது 100-ஆவது போட்டியில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil