மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக காயமடைந்தார்.
அதனால் கடந்த சில போட்டிகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட முடியாமல் இருந்த அவருக்கு நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மீண்டும் துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்தது.
கம்பேக் போட்டியில் அசத்திய ரோஹித் சர்மா :
காயத்திலிருந்து மீண்டு வந்த ரோகித் சர்மா எவ்வாறு விளையாடப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் நேற்றைய போட்டியில் அவர் கொடுத்த அதிரடியான துவக்கமே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது.
பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய வேளையில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 44 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 190 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 84 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கும் உதவியது.
அதோடு நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா ஒரு முக்கிய சாதனை ஒன்றினையும் ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஏற்கனவே ரோகித் சர்மா ஐ.பி.எல் போட்டிகளில் இந்த 2026 ஆம் ஆண்டு முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 23 பந்துகளில் அரைசதம் அடித்தது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது தனிப்பட்ட அதிவேக அரைசதமாக மாறியது.
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஹார்டிக் பாண்டியா ஏன் விளையாடவில்லை? - சூரியகுமார் யாதவ் விளக்கம்
இவ்வேளையில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளின் தனது நான்காவது அதிவேக அரைசதத்தை ரோகித் சர்மா பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
