சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஆர்.சி.பி அணிக்கெதிரான வெற்றி குறித்து : சுப்மன் கில் மகிழ்ச்சி
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 155 ரன்களை மட்டுமே அடித்தால் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் திருப்திகரமாக ஒன்றாக அமைந்துள்ளது. இந்த ஆடுகளத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 160 ரன்களுக்குள் சுருட்டியது பந்துவீச்சாளர்களின் சிறப்பான முயற்சியாக கருதுகிறேன்.
அதேபோன்று ஃபீல்டிங்கும் இன்று சிறப்பாக இருந்தது. எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே ஒன்றிணைந்து களத்தில் நல்ல ஆர்வத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி மிகச் சிறப்பாக போட்டியை துவங்கியும் அவர்களை நாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தோம். அதேபோன்று நான் பேட்டிங் செய்த முதல் பந்து அதிர்ஷ்டவசமாக பவுண்டரிக்கு சென்றது.
இவ்ளோ தூரம் இந்த மேட்ச்ச கொண்டு போனதே பெரிய விடயம்.. தோல்விக்கு பிறகு - ரஜத் பட்டிதார் பேச்சு
பின்னர் அடுத்த பந்தில் இருந்து என்னுடைய சோனிற்கு பந்து வந்ததால் அதிரடியாக விளையாடினேன். அதேபோன்று ராகுல் திவாட்டியா எங்கள் அணியில் ஒரு முக்கியமான வீரர். அவர் போட்டியை முடித்து கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.
