Dailyhunt

அறிமுகமான ஒரே போட்டியோடு சென்னை அணியில் இருந்து விலகிய இளம்வீரர் - என்ன நடந்தது?

Crictamil 1 week ago

ந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருந்த சில முக்கிய நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறினர்.

அதோடு தற்போது இந்த தொடரானது பாதி போட்டிகளை கடந்துள்ள நிலையில் முக்கிய அணிகளில் சில நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருவது அந்தந்த அணிகளுக்கு பின்னடைவாக மாறி வருகிறது.

சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறிய இளம்வீரர் :

அந்த வகையில் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணி வீரர்களின் காயத்தால் மிகப்பெரிய சரிவுக்கு சென்றுள்ளது. குறிப்பாக இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நாதன் எல்லீஸ் சி.எஸ்.கே அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஸ்பென்சர் ஜான்சனும் காயம் காரணமாக முதல் பாதி போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதோடு ஐ.பி.எல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தோனி காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாமல் போனார். அதோடு இன்னும் அவர் அணிக்கு திரும்பாமலும் இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாடிய ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார்.

அதன்பின்னர் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதும் காயம் காரணமாக சி.எஸ்.கே அணியிலிருந்து விலகினார். இப்படி சிஎஸ்கே அணிக்கு காயம் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்த வேளையில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே அணிக்காக அறிமுகமான இளம் வீரரான ராமகிருஷ்ணா கோஷ் ஒரே போட்டியுடன் எஞ்சியுள்ள இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவை பின்னுக்கு தள்ளி வருண் சக்கரவர்த்தி - நிகழ்த்திய சாதனை

அதற்கு காரணம் யாதெனில் : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசிய அவர் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தாலும் அந்த போட்டியின் போது பந்துவீசுகையில் வலது கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அந்த எலும்பு முறிவு கண்டறியப்பட்டதால் அவர் எஞ்சியுள்ள 2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil