Dailyhunt

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான இந்த அசத்தலான வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் - பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

Crictamil 1 week ago

ந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது :

பஞ்சாப் அணிக்கெதிரான வெற்றி குறித்து : பேட் கம்மின்ஸ் பேட்டி

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே குவிக்க 33 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அசத்தலான வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது : பஞ்சாப் அணி மிக வலிமையான அணி. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அவர்கள் எதிராக விளையாடுவது சவாலான ஒரு விடயம் தான். இந்த போட்டியை பொருத்தவரை எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் மிகப் பிரமாதமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த போட்டியில் என்ன ஸ்கோர் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பதிவு வீசுவது கடினம் என்று நினைத்தோம். அந்த அளவிற்கு பஞ்சாப் அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது. இருந்தாலும் இந்த போட்டியில் நாங்கள் ஒரு அற்புதமான முழுமையான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம். பேட்டிங்கில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க பந்துவீச்சிலும் எங்களது செயல்பாடு திருப்திகரமாக இருந்தது.

இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தடுமாற்றத்திற்கு இதுவே காரணம் - ரவி சாஸ்திரி கருத்து

ஒட்டுமொத்தமாக அவர்களை இந்த போட்டியில் நாங்கள் வீழ்த்த எங்களது அணியின் பேட்ஸ்மேன்களே முழுக்க முழுக்க காரணம் என்று நினைக்கிறேன். அவர்கள் ஏற்படுத்திய மொமென்ட்டம் தான் இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்தது. அதனாலே எங்களால் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட முடிந்தது என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil