கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டி வரை முன்னேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்து தங்களது முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
ஆனால் இம்முறை நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு தற்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் என்னுடைய ரோல் இதுதான் : கூப்பர் கானோலி
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற வேளையில் நேற்று ஏப்ரல் 3-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான கூப்பர் கானோலி தொடர்ந்து இரண்டு போட்டியிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். முதல் போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த அவர் நேற்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் 22 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரியுடன் 36 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் தான் முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்தும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தனக்கு என்ன ரோல்? என்பது குறித்தும் நேற்றைய போட்டி முடிந்து கூப்பர் கானோலி பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தான் நாம் தற்போது உள்ளோம். முதல் இரண்டு போட்டிகளிலும் நான் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இனிவரும் போட்டிகளிலும் அந்த அசத்தலான ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்.
ஏனெனில் தற்போது இரண்டு போட்டிகள் தான் முடிந்துள்ளன இது மிகப்பெரிய தொடர் இன்னும் எங்களுக்கு 12 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அந்த போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை என்னுடைய ரோல் என்பது பவர்பிளேவிற்கு பிற்பாதியில் வரும் நான் மிடில் ஓவர்களின் போதும் நல்ல ரன் ரேட்டை கண்ட்ரோல் செய்து கொண்டு செல்ல வேண்டும். அதற்கேற்றவாறு நான் அதிரடியாக விளையாடி வருகிறேன்.
11 பந்துகளில் ஆட்டநாயகன் விருது.. தரமான சாதனையை 2ஆவது வீரராக நிகழ்த்திய - பிரியான்ஷ் ஆர்யா
பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் இருப்பதினால் எனக்கு சற்று சாதகமாக இருக்கிறது. அதேபோன்று இந்த தொடரில் தற்போது நான் பேட்டிங்கை மட்டும் செய்து வரும் வேளையில் விரைவில் என்னுடைய பந்துவீச்சு திறனையும் இந்த தொடரில் சரியான நேரம் வரும்போது காண்பிப்பேன் என்றும் கூப்பர் கானோலி கூறியது குறிப்பிடத்தக்கது.
