Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறந்தது ஏன்? - விராட் கோலி வெளிப்படை

Crictamil 2 days ago

ந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2025 ஆம் ஆண்டு வரை 123 போட்டிகளில் விளையாடி 30 சதம் மற்றும் 31 அரை சதம் என 46 ரன்கள் சராசரியுடன் 9,230 ரன்களை குவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கேப்டன்சி பதவியை துறந்தது ஏன் ? : விராட் கோலி

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வந்தார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடி 40 வெற்றிகளை பெற்றிருந்தது.

இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்காக அதிக வெற்றிகளை குவித்த கேப்டனாக விராட் கோலி சாதனை நிகழ்த்தியிருந்தார். அதோடு கேப்டனாக அதிக சதம் மற்றும் அதிக அரைசதம், அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்திருந்தார். இந்நிலையில் தான் ஏன் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து 2022 ஆம் ஆண்டு திடீரென விலகினேன் என்பது குறித்து மனம் திறந்த சில கருத்துக்களை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இரண்டு பொறுப்புகளில் இருந்ததால் மிகப்பெரிய சுமையையும் அழுத்தத்தையும் சந்தித்தேன். என்னுடைய பதவியின் ஆரம்ப கட்டத்தில் அது தெரியவில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல என்னிடம் இருந்த அழுத்தத்தை நான் உணர்ந்தேன். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் முற்றிலும் சோர்வடைந்து விட்டதாலயே டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினேன். என்னிடம் கொடுப்பதற்கு வேறு எதுவும் மிச்சம் இல்லை.

ரஷீத் கானை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் தொடரில் மோசமான சாதனையை நிகழ்த்திய - அன்ஷுல் கம்போஜ்

அந்த ஒரு கடினமான காலகட்டத்தில் தான் நான் டெஸ்ட் கேப்டன் பதிவிலிருந்து வெளியேறினேன். அப்படி நான் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினாலும் என்னால் முடிந்தவற்றை ஒரு வீரராகவும் இந்திய அணிக்கு வழங்க தயாராக இருந்தேன். இருந்தாலும் அணியின் நலன் கருதி அடுத்த சில ஆண்டுகளிலேயே ஓய்வு பெறவேண்டிய சூழலும் வந்தது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil